Thirumavalavan: விசிக கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் “தனக்கு முதல்வர் கனவு இருக்கிறது” ஏன் தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை, திருமாவளவன் ஆசை விரைவில் நிறைவேறும் என பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற திருமாவளவன், அதற்கு முன்பு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது செய்தியாளர் சந்திப்பில் அவர் எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்கிற கனவு உண்டு. அதற்காக ஒரு புள்ளியை வைத்துள்ளோம். ஒரு புள்ளியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது, அதற்கு நூற்றுக்கணக்கான புள்ளிகள் வேண்டும் என்றார் அடுத்ததாக தென் இந்திய மாநிலங்களில் விசிக கட்சி வளர்ந்து வருகிறது.
கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்கள் மட்டுமல்லாமல் மகாராட்டிரம் மாநில அரசியல் களத்திலும் கால் பதிக்கிறது விசிக. தமிழகத்தில் வேறு கட்சிகளில் இல்லாதது போன்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி செயலாளர்கள் நியமித்து இருக்கிறோம், விசிக அடிப்படையில் இருந்து வலிமை பெற்று இருக்கிறது. என்றார்.
மேலும் 20 வது வருடங்களுக்கு முன்பு எனக்கு முதல்வர் ஆக ஆசை இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறேன். தலித் மக்கள் ஆட்சி அதிகாரம் ஆளுமை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று கூறினார்.