ADMK BJP: 2026யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தனது கவனத்தை தமிழக தேர்தலில் திருப்பியுள்ளது. மத்திய அரசில் பாஜக பலமாக இருந்தாலும் தமிழகத்தில் அதனால் நுழைய முடியவில்லை. இதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இறுதியில் அது தோல்வியிலேயே முடிந்தது.
தமிழகத்தில் நிலைபெற வேண்டுமென நினைக்கும் பாஜக, இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வதற்காக திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் இருவரும் இணைந்துள்ளனர். ஆனால் அப்போதும் கூட இருவருக்குள்ளும் வெளி வராதா சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது செல்லூர் ராஜுவின் கருத்து.
பீகாரில் பாஜக வெற்றி பெற்றது குறித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி தான் பாஜக பீகாரில் வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார். அவர்கள் வெற்றி பெற்றதற்கு நாங்கள் தான் காரணம் என்று கூறிய இவரின் இந்த கருத்து பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியான பாஜக அதிமுகவால் தான் வெற்றி பெற்றது என்ற இவரது கருத்துக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாஜக-அதிமுக கூட்டணியில் சச்சரவு நிலவி வரும் வேளையில் இவரின் இந்த பேச்சு அதனை பெரிதாக்கும் வகையில் அமைந்துள்ளது.

