ADMK PMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முன்னணி கட்சிகளைனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பாமகவை சேர்ந்த தொண்டர்கள் பாமக கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, சேலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார். அப்போது ஜலகண்டாபுரம் வழியாக செல்லும் போது, அங்கு அதிமுக கொடி மட்டுமல்லாது பாமக கொடியும் வரவேற்புக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு முறை பாமக நிறுவனர் ராமதாசை மருத்துவமனையில் சந்தித்த இபிஎஸ் அவரிடம் சுமார் அரைமணி நேரம் பேசினார்.
இது குறித்து கேட்டபோது அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் தற்போது சேலத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் பாமக-அதிமுக கூட்டணி புதிதாக உருவெடுத்துள்ளது என்பதை காட்டுகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றும், தவெக தொண்டர்கள் தாமாக முன் வந்து ஆர்வத்துடன் அதிமுக பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
நாங்கள் தலைமையின் அனுமதி பெற்று வருமாறு அறிவுறித்தினோம் என்றும் கூறினார். இந்நிலையில் பாமக கொடியுடன் இபிஎஸ்க்கு வரவேற்பளிக்கப்பட்டது கூட்டணி கணக்குகளின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.