ADMK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சிகளனைத்தும், மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி கணக்குகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்றும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டுமென்றும் புது புது வியூகங்களை கையில் எடுத்துள்ளது. திமுகவை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிக முக்கியம் என்பதால் மற்ற கட்சிகளை விட வேகமாக செயல்படுகிறது என்றே கூறலாம்.
இந்நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணி உருவானது விவாதங்களுக்கு வழிவகுத்த நிலையில், அதிமுக அமைச்சர் சிவி. சண்முகம் திமுக அரசு வழங்கிய இலவச திட்டங்களை பெண்களோடு ஒப்பிட்டு பேசியது பேசு பொருளானது. இதன் காரணமாக அவர் பலரின் கண்டங்களுக்கு ஆளானார். இதனை தொடர்ந்து, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று கூறி விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மகளிரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலிருந்து ஒருவர் கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் சிவி சண்முகம் பெண்களை இழிவாக பேசியது தான் என்று பலரும் கூறி வருகின்றனர். எனவே சிவி சண்முகத்திற்கு எதிராக அதிமுக மகளிரணி களமிறங்கி விட்டது என்று அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதிமுகவில் ஏற்கனவே இருக்கும் பிளவுகளை சமாளிப்பதற்க்கே நேரமில்லாத இபிஎஸ்க்கு இது பேரிடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

