அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
ஈரோடு மாவட்டத்தில் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்பொழுது அங்கு பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வாக்குகளை சேகரித்து வருகிறது.எதிர்க்கட்சியானது தனது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஆணை கிணங்க தனது வேட்பாளரை நிறுத்தி ஓட்டுகளை சேகரித்து வருகின்றது.
இவ்வாறு ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் இருக்கும் நிலையில் வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற போவதால் அன்று அம் மாவட்டம் தோறும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளனர்.
எனவே வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விடுப்பு அளித்ததை அடுத்து அதனின் வேலை நாள் வேறொரு சனிக்கிழமை வைக்கப்படும் என்று கூறுகின்றனர். இந்த ஈரோடு இடைத்தேர்தல் ஆனது பிப்ரவரி 27ஆம் தேர்தல் நடைபெற்று அடுத்த மாதம் மார்ச் இரண்டாம் தேதி முடிவுகள் வெளிவர உள்ளது.