கள்ளகாதலை கண்டித்த தம்பியை துண்டுகளாக்கிய அக்கா.. 8 ஆண்டுகள் கழித்து கைது..!

0
231

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், தேவனாங்காவ் கிராமத்தில் வசித்து வருபவர் சித்தப்பா பூசாரி. இவருக்கு பாக்கியஸ்ரீ என்ற மகளும் லிங்கப்பா என்ற மகனும் உள்ளனர்.பாக்கிய ஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த சங்கரப்பா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் அதனை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், சங்கரப்பாவிற்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் மனைவியிய விட்டு பிரிந்த சங்கரப்பா முன்னாள் காதலி பாக்கியஸ்ரீயுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதன்பின்னர், அடிக்கடி அவருடன் தனி அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இருவரும் அங்கிருந்து ஜிகினிக்கு சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனை அறிந்த பாக்கியஸ்ரீயின் தம்பி அக்காவை தேடி ஜிகினி பகுதிக்கு வந்துள்ளார். அக்கா முன்னாள் காதலருடன் வாழ்ந்து வருவதை கண்ட லிங்கப்பா திருமணமானவருடன் சேர்ந்து வாழ வேண்டாம் என கூறியுள்ளார். அவரை வீட்டிற்கு அழைத்து சென்ற பாக்கியஸ்ரீ சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தம்பி என பாராமல் அவரை அடித்து கொலை செய்து 30 துண்டுகளாக வெட்டியுள்ளார் பாக்கியஸ்ரீ.

அதனை வெவ்வேறு இடங்களில் வீசி விட்டு இருவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தேடி வந்த நிலையில், மகாராஷ்டிராவின் நேற்று முன் தினம் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.