விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

0
226
#image_title

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

நடந்து முடிந்த ஈரோடு இடை தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளில் பெறும் மாற்றங்கள் ஏற்பட்டது குறித்து இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கூற்றம் கூறிவந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய ஒற்றை வார்த்தை பெறும் பூகம்பத்தை ஏற்படுத்தியது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார்.

 

அண்ணாமலை இவ்வாறு கூறியது அதிமுக முன்னணி தலைவர்கள் பல கடுமையான விமர்சனங்களை எழுப்பினர், மேலும் பஜாகவின் சில முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு காரணமாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

 

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த இரு கட்சிகளுக்கும் உரசல் ஏற்பட்ட நிலையில், மீண்டும் இந்த விவகாரம் சூடு கிளப்பி உள்ளது.

பாஜகவில் சமீபத்தில் இணைந்த செங்கல்பட்டு மாவட்ட துணை தலைவர் கங்காதேவி, உட்கட்சி பூசல் காரணமாக மீண்டும் அதிமுகவில் இணைந்தார், இவரை போன்று அதிருப்தியில் பாஜகவில் உள்ள மற்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

பாஜக பல கட்சியிலிருந்து நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு அழைத்து வந்தாலும் அவர்கள் வந்த வேகத்தில் திரும்பி சென்றுவிடுகின்றனர், இதற்கு உதாரணம் திமுக மூத்த உறுப்பினர் செல்வம், பாஜகவில் சேர்ந்த மறுநாளே மீண்டும் திமுகவிற்கே சென்றது குறிப்பிடத்தக்கது, எது எப்படியோ ஒட்டு மொத்தமாக பார்த்தால் பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியே வருவது, அக்கட்சியின் வலுவற்ற நிலையை எடுத்துக் காட்டி வருகிறது.