உலகம் முழுவதும் 17 மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 மில்லியனைக் தாண்டியது. அது மட்டும் இல்லாமல் கடந்த நான்கு நாள்களில் ஒரு மில்லியன் நோய்த்தொற்று பரவியுள்ளது. அதில் அமெரிக்கா மிக மோசமாக பாதிப்புக்குள்ளானதாகும். அங்கு 1.5 மில்லியனுக்கு மேல் இறந்துவிட்டனர். 40 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றுமொரு மாநிலமான ஃபுளோரிடாவில் 250க்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் இறந்துவிட்டனர். நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் இறக்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிற சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சிறப்பு ரயில்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து … Read more

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இப்போதைக்கு தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று டிரம்ப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால் மோசமான தேர்தலாக அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனேனில் முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரலாம் என கூறினார். கடினமான தேர்தல் முறைகளில் தபால் ஒட்டுமுறை இந்த முறை பயன்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் கடினமான சுழலே அமைந்துள்ளது. இங்கும் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டால் அவமானமாக அமைந்துவிடும் … Read more

“ஸ்மார்ட்போன்” இல்லாததால் உயிரையே மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்!! உண்மை நிலவரம் என்ன?

தற்போது நிலவி வரும் பொதுமுடக்க நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது அந்தந்த கல்வி நிலையங்கள்.   இந்த ஆன்லைன் வகுப்பானது வசதி உள்ளவர்களுக்கும், வசதியே இல்லாத மாணவர்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதுடன், வசதியில்லாத மாணவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.   ஆன்லைனில் படிப்பதற்கு திறன்பேசி (ஸ்மார்ட் போன்) அவசியமாக உள்ளதால் அதனை அந்தந்த மாணவர்களுக்கு உரிய வகையில் ஏற்பாடு செய்ய பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர். … Read more

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக காலமாக இவர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்து உள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இருவரும் உயிர் பிரிந்து சடலமாக கிடந்தனர். இதனைப் … Read more

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனா மெதுவாக இயல்பு நிலைக்கு வந்த நிலையில் சீனத் தலைநகரான  பீஜிங் அருகே  கொரோனா வைரஸ் கடந்த மாதம்  மீண்டும் பரவத் துவங்கியது. பீஜிங்கில் உள்ள  இறைச்சி சந்தையில் பணிபுரிவரிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று  பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவின்  மற்றும் ஒரு மாகாணமான சின்ஜியாங்கில் ஒரே நாளில் 112 பேருக்குக் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. சின்ஜியாங்கின் தலைநகரில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் … Read more

பக்ரீத் கொண்டாட்டம் ஏன்? பக்ரீத் என்பது தியாகத் திருநாளா? உண்மையில் பக்ரீத் எதற்காக கொண்டாடப்படுகிறது?

பக்ரீத்னா என்ன? பக்ரா – ஆடு. ஈத் – பண்டிகை.     இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் முதலாவது – ரமலான் எனப்படும் ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர்). இரண்டாவது பண்டிகை – தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் (ஈதுல் ஸுஹா).   ஏன் இது தியாகத் திருநாள் என அழைக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.   சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களை, தன் மனைவியையும் மகன் இஸ்மாயிலையும் வறண்டு கிடந்த அரேபியப் … Read more

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

அமெரிக்காவில் விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்த ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி கலிபோர்னியா மாகாணத்தில்  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார். அவர் விமானத்தை அனைவர் முன்னாடியும் இயக்கியும் காட்டினார். இதன் காரணமாக உலகிலேயே அதிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தன்னை அடையாளப்படுத்தி கின்னஸ் சாதனையை   நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்விற்கு முன்பு 98 வயதான ஆண்தான் அவர் அயோவா மாகாணத்தை … Read more

ஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தை நிர்வகிக்க போதுமான காவலர்கள் இல்லை என்பதால் ஏற்கனவே காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் பெறாதோருக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாடு காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் அதிகமுள்ள காலத்தில், காவலர் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், புதிய வாய்ப்புகளை … Read more

பங்குச் சந்தை திடீர் பல்டி!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான 335 சென்செக்ஸ் புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 100.70 புள்ளிகளில் குறைந்தது. பங்குச்சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் முடிந்தது இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வர்த்தகம் நேர்மையுடன் தொடங்கியது. ஆனால் பிற்பகலில் வங்கி நிதி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும் பெரிதும் … Read more