மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள்

Dr Ramadoss Master Plan for Vanniyar Reservation 2021

மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள் வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ளதால் அந்த சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் கடந்த 40 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் … Read more

திமுகவுடன் கூட்டணியில் இணைய போகும் தேமுதிக- அதிர்ச்சியில் உறைந்த அதிமுக தரப்பினர்.

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது ஏற்கனவே பாமக கேட்கும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுத்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று பாமக தரப்பில் கூறிவருகிறார்கள்.அதேபோல் தற்பொழுது தேமுதிக தரப்பிலும் எங்களுக்கு 41 தொகுதிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தேமுதிகவின் எந்த கோரிக்கைக்கும் அதிமுக தரப்பு செவிசாய்க்காததால் கூட்டணியை விட்டு வெளியேற போகிறோம் என்று … Read more

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது தொடர்பாக இன்றைய தினம் முடிவு!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்த சசிகலாவிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சிறை வளாகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. அதோடு அவருக்கு அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சசிகலா சென்ற பத்து தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றார் .இதற்கிடையே அவருடைய தண்டனை காலம் முடிவடைந்து விட்ட காரணத்தால், சிறை நிர்வாகம் அவரை … Read more

தேர்தலில் அரசியல் லாபத்திற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது! ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி வரும் ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகின்றார். அந்த சமயத்தில் ஆளும் கட்சியான அதிமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றார். தற்சமயம் இந்த கிராம சபைக் கூட்டத்தின் அடுத்த கட்டமாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். அந்த விதத்தில் ஸ்டாலின் இன்றைய தினம் வேலூர் சட்டசபைத் தொகுதியில் தன்னுடைய பரப்புரையை தொடங்கினார். அந்த கூட்டத்தின் போது உரையாற்றிய ஸ்டாலின் … Read more

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

பட்டியல் இன மக்களுக்கு எதிரான கட்சி பாமக என்று பொதுவாக பேசிவரும் நிலையில் ,அகில இந்திய பட்டியல் இன பேரவை சார்பாக பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக முதல்வருக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரங்களில் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை 5 கட்டங்களாக பாமகவும் மற்றும் வன்னியர் அமைப்புகளும் சேர்ந்து போராடிக்கொண்டு வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே நாடார் சங்கங்கள் அருந்ததியர் அமைப்புகள் ஆதரவு அளித்து வந்தன. அதேபோல் புதிய தமிழகம் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது பாமகவின் ஆறாவது கட்டம் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உள் இட ஒதுக்கீடு கேட்டு தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தினார்கள் .இந்த போராட்டத்தில் எப்பொழுதும் இல்லாத அளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் .மேலும் இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி திமுக அதிமுக தேமுதிக கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் வியப்படையச் செய்தது.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய பட்டியல் இன எழுச்சி பேரவையின் மாநில துணைத் தலைவர் வீ. மாரியப்பன் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

 

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவர் ராமதாசின் அழுத்தத்தின் பேரில் தான் கிடைத்தது, இப்போது வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கோரி அறவழியில் டாக்டர் . இராமதாஸ் அவர்கள் போராடி வருவது நியமாகவும் , நேர்மையாகவும் தெரியவருகிறது . வன்னியர்களின் அதிகம்பேர் வருமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் இது மறுக்கமுடியாத உண்மை . வன்னியர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி உதவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை தங்களின் மேலான பார்வைக்கு பணிவுடன் சமர்பிக்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக அரசு வன்னியர்களின் கோரிக்கையை கண்டுக்காமல் நிராகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வன்னியர் சமுதாயத்துக்கு 20% சதவீதத்தில் கிடைக்கும் பிரதிநிதித்துவம் 3.5% மட்டும் தான்,
எதுவுமே செய்யாத 4 சாதிகளுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 8 %
இது எவ்வளவு பெரிய அநியாயம்.அதனால் தான் வன்னியர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு தருமாறு கேட்டு போராடி வருகிறோம் என்கிறார்கள் பாமகவினர்.

பாமகவிற்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தேமுதிகவை கழட்டி விட நினைக்கும் அதிமுக என்ன செய்யலாம்! இன்று முக்கிய முடிவு எடுக்கும் விஜயகாந்த்!

அதிமுக கூட்டணியில் தற்போது இருந்து வரும் தேமுதிக எதிர்வரும் தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து சந்திக்கலாமா, அல்லது தனித்து சந்திக்கலாமா என்பது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ஆனாலும் ஆளும் கட்சியான அதிமுக அதனைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சசிகலாவை ஆதரிக்கும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் வகையிலும் பேசியிருக்கிறார். அவருடைய அந்த பேச்சு ஆளும் … Read more

சுயநலம் மிக்கவர்கள்! ரஜினி ரசிகர்களை ஆடிட்டர் குருமூர்த்தி!

ரஜினி கட்சி தொடங்க வில்லை என்று தெரிவித்த உடனேயே அவருடைய ரசிகர்கள் பலர் அதிமுகவும் திமுகவும் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஊழலை ஒழித்து விட வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்திருந்தார். ஆனால் தற்போது அந்த ஊழல் எங்கிருந்து ஊற்றெடுக்கிறதோ அந்த கட்சியில் போய் அவருடைய ரசிகர்கள் சேர்ந்து இருப்பது ஒரு சிலருக்கு வேண்டும் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு காரணம் எதுவும் இல்லை என்று ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பாக பத்திரிகையின் ஆசிரியர் … Read more

அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சசிகலாவின் விடுதலையை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும், தற்போது அதிமுகவில் இருக்கும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் ஆளுங்கட்சியை சசிகலா கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி கொண்டு … Read more

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மீது இருந்த கோபம் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு புதுச்சேரிக்கு வந்த நமச்சிவாயத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். இதனையடுத்து, புதுச்சேரியின் பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற நமச்சிவாயத்தை அந்த மாநிலத்தில் பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றார்கள். இதனை அடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய நமச்சிவாயம் தங்களைப் … Read more

கனிமொழியை விமர்சித்த பாஜக நிர்வாகி! கொதித்தெழுந்த குஷ்பு செய்த காரியம்!

நடிகை குஷ்பு பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் பாஜகவினர் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்களை கண்டித்து வருகிறார் நடிகை குஷ்பு. சமீபத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நாக்பூர் டவுசரவலாக்களால் தமிழ்நாட்டில் எதிர்காலம் என்னவென்று நிர்ணயிக்க இயலாது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த விஷயத்திற்கு பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் அட முட்டாளே இத்தாலி பார் டான்சர் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு … Read more