ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை அணி?

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கான ஊதா நிற தொப்பி உள்ளிட்ட இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களே வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் பெற்றிருக்கிறது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. ஜோஸ் பட்லர், படிக்கல், ஹெட்மயர் ரியான் பராக் கேப்டன் சாம்சங் பேட்டிங்கிலும், ரவிச்சந்திரன் … Read more

ஈரோடு அருகே வேன் மீது மோதிய இருசக்கர வாகனம்! 2 பேர் பரிதாப பலி!

தற்சமயம் நாடு முழுவதும் பல இடங்களில் விபத்துக்கள் திடீர், திடீரென்று நடந்த வண்ணமிருக்கின்றன. இதற்குக் காரணம் காவல்துறையா? அல்லது வாகன ஓட்டுநர்களா? அல்லது சாலையை சரிவர பராமரிக்காதவர்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகே அக்கறை தந்தபள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது . இந்த சம்பவத்தில் பைக்கை ஓட்டி வந்த 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். … Read more

எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது அதிமுகவிடமில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

தேனியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு 11,000 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார், இதுகுறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் வளர்ச்சி என்பதை எல்லோரும் சாத்தியப்படுத்துவது தான் திராவிட மாடல், மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களுடைய செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார். 10 வருடங்களில் … Read more

அடேய் 90ஸ் கிட்ஸ் சாபமெல்லாம் உங்களை சும்மா விடாதுடா! பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

தற்போது பள்ளி பருவ வயதில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ, பதின் பருவ வயதிலேயே பருவக் கோளாறு பிடித்துவிடுகிறது. இதன் காரணமாக, பலர் காதலபித்துப்பிடித்து சுற்றித்திரிந்து வருகிறார்கள். பதின் பருவ வயதை கடப்பதற்கு முன்னரே பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், பள்ளி படிப்பின் மீது கவனமிழந்து காதல் என்ற பெயரில் பெண் பிள்ளைகள் பின்னால் மாணவர்கள் சுற்றி திரிவது வேதனையளிக்கும் விஷயமாக இருக்கிறது. இதற்கு முதலில் உளவியல்ரீதியாக மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களுடைய … Read more

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. ஆகவே இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில. அரசுகள் தீவிரம் காட்டினர். ஆகவே நாட்டிலுள்ள தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது. நோய்த்தொற்று இந்தியாவில் … Read more

ஆப்கானிஸ்தான் விரைவில் விடுதலை பெறும்! முன்னாள் ராணுவ தளபதி சூளுரை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருட காலமாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கடுமையான தாக்குதலை நடத்தி அந்த நாட்டை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அந்த விதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்த ஆப்கானிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி … Read more

நீதிமன்றங்களின் இந்த செயல்தான் சாமானிய சாதாரண மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்! பிரதமர் நரேந்திர மோடி உரை!

மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இந்த மாநாடு நடத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மாநாட்டிற்குப் பிறகு மறுபடியும் இந்த மாநாடு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்றைய தினமே செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலை காரணமாக, இந்த மாநாடு நடத்தப்படாமல் … Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்! விமானியின் செயலால் நடைபெற்ற விபரீதம் 66 பேர் பலியான சோகம்!

பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி எகிப்து நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டு வானில் சென்று கொண்டிருந்தது. நடுவானில் பாதி தூரம் சென்ற அந்த விமானம் கடலில் மேல் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. ஆகவே இந்த விமானம் எங்கு சென்றது? என்ன ஆனது? என தெரியாமல் இருந்து வந்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 66 பேரும் பலியானார்கள். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் … Read more

என்னுடைய மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்! ஹேமந்த் வழங்கிய பகீர் புகார்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக விஜய் டிவியில் பிரபலமான வி.ஜே சித்ரா கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் நசரத்பேட்டையிலிருக்கின்ற பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இந்த திடீர் மரணம் அவருடைய ரசிகர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் உள்ளிட்டவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சித்ராவிற்கும் ஹேமந்த் என்பவருக்கும் பதிவு திருமணம் … Read more

கத்துக்குட்டியிடம் விழுந்த பஞ்சாப் அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி!

10 அணிகளுக்கிடையிலான 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது.சென்ற மாதம் தொடங்கிய இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புனேயில் நேற்று நடந்த 42 வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் லக்னோ அணி முதலில் பேட்டிங் … Read more