பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்!

0
144

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்!

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் ஏராளமான உள்ளனர். இதனலேயே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமல்படுத்துகிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில்
மக்கள் முகக்கவசம் அணியவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்
என சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை மக்கள் அனைவரும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் இது போன்ற பல இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் அதுமட்டுமின்றி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேற்கண்ட மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார மேற்கொள்ள ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் ஆய்வின் போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.500/- அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு நாளை 06.07.2022 முதல் தமிழ்நாடு
பொதுசுகாதாரச் சட்டம் 1939ன் படி ரூ.500/ அபராதம் விதிக்கப்படும்.

Previous articleகுட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!
Next articleகுட் நியூஸ்! 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவெளைகள் குறைப்பு! பள்ளிக் கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!