எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்!
ஓ பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை இபிஎன் சாலை பெருந்துறை சாலை சந்திப்புகளை எனக்கு வண்ணம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக ஆட்சியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அந்த மேம்பாலத்திற்கு செயலாளர் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
மேலும் அந்த மேம்பாலங்களிலும் பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சட்டப்பேரவை தேர்தலின் போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களையும் மறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது அப்போது ஜெயலலிதா பெயரில் ஆன இந்த மேம்பாலத்தின் பெயரும் மூட ப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து அரசியல் காரணமாக மறைக்கப்பட்ட மேம்பாலத்தின் பெயர் சரி செய்யப்படவில்லையோ என்று எண்ணம் அனைவருக்கும் தோன்றி வருகிறது. மேலும் இந்தவிவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு அந்த மேம்பாலத்தில் மட்டுமல்லாமல் எந்த இடத்தில் எல்லாம் பெயர்கள் தேர்தலுக்காக மறைக்கப்பட்டது.
மேலும் அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் எனவும் ஓபன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜெயலலிதாவின் பெயர் மறைக்கப்பட்டது கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சட்டப்பேரவை தேர்தலுக்காக தான் ஜெயலலிதாவின் பெயர் மறைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் கட்சி காரணமாக ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட பலகை மூடப்பட்டது எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்.