என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !..

Photo of author

By Parthipan K

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !..

Parthipan K

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !..

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு மொத்தம் ஆறு வில்லன்கள் என்றும் இதில் சஞ்சய் தத், பிரித்விராஜ் தேந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது விஜய்க்கு 67ஆவது  படம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் பகிராத போதிலும் அவ்வப்போது புதிய தகவல்கள் வலைத்தளத்தில் பரவி தான்  வருகிறது.இதுமட்டுமின்றி விஜய்க்கு வில்லியாக சமந்தாவும், கதாநாயகியாக திரிஷாவும் கமிட்டாகியுள்ளதாக தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிக்கிறார். என்றும் சொல்லப்படுகிறது.இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.

கன்னட வில்லன் தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு சமந்தா பெயர் அடிபடுகிறது. படப்பிடிப்பை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்க உள்ளனர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.