சி எஸ் கே உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஜடேஜா… விலகுவது உறுதி!
சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கியவர் ரவிந்தர ஜடேஜா.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது. அதுபோல சி எஸ் கே சம்மந்தமான பதிவுகளை ஜட்டு நீக்கினார். இதனால் அவர் தொடர்ந்து சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்குப் பின்னர் ஜடேஜா சி எஸ் கே அணி நிர்வாகத்தோடு எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதன் மூலம் அவர் சி எஸ் கே வுக்காக தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் டிரேடிங் விண்டோ மூலமாக அடுத்த சீசனில் தன்னை எடுக்க வேறு அணிக்கு மாற அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். சிஎஸ்கே அணி நிர்வாகம் அதற்கு சம்மதிக்கும் என்றே தோன்றுகிறது. அதனால் அடுத்த சீசனில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.