தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை! அரசின் அதிரடி நடவடிக்கை!
காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள மாநிலம் எதுவென்றால் அது டெல்லி தான். வருடம் தோறும் டெல்லி மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் டெல்லியில் காற்றின் தரம் பெருமளவு குறைந்து காணப்படுகிறது. காற்றின் தர குறியீடு 201 லிருந்து 300 இருந்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.
ஆனால் டெல்லி தற்பொழுது அந்நிலையையும் கடந்து விட்டது. அதனால் டெல்லி அரசு அனைத்து வகையான பட்டாசுகளை வெடிப்பதற்கும் தடை விதித்துள்ளது. அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கையிலே இந்த அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.