பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

0
105

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

தேவையான பொருட்கள் :நான்கு பனங்கிழங்கு ,ஒரு கப் தேங்காய்ப் பால், அரை கப் பனை வெல்லக் கரைசல் ,மூன்று ஏலக்காய் பொடியாக்கியது,மூன்று முந்திரி நெய்யில் வறுத்த கொள்ள வேண்டும். நான்கு திராட்சை, தேவையான அளவு நெய்,

செய்முறை :முதலில்  பனங்கிழங்கை முழுவதாக வேக வைத்து தோல், உள்தண்டு பகுதியை நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அதனை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காதவாறு இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.

சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி ,திராட்சை சேர்த்து கிளறி விட வேண்டும். சுவையான பனங்கிழங்கு பாயாசம் ரெடி ஆகி விடும் .

author avatar
Parthipan K