சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!

Photo of author

By Vinoth

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!

Vinoth

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!

சர்தார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தீபாவளிக்கு வெளியான படங்களில் வெற்றிப் படமாக அமைந்தது.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் சர்தார் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதுவரை சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாளில் 42 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். விரைவில் இந்த படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என கருதப்படுகிறது. இந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் திரைப்படத்தின் மூலமாக ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்துள்ளார் கார்த்தி.

இதையடுத்து நேற்று சென்னையில் சர்தார் படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் கலந்துகொண்ட படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசினார்கள். இந்நிலையில் நேற்று சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு விரைவில் இரண்டாம் பாகம் உருவாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

சமீபகாலமாக படம் முடியும் போதே, இரண்டாம் பாகத்துக்கான ஒரு துணுக்கை வைத்து படமாக்கி, இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள். சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்குக் கூட இதுபோல க்ளைமேக்ஸ் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அது ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை.