போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

0
137
Cancel the new fine system for traffic violations? 3 weeks time for Tamilnadu.. High Court action order!
Cancel the new fine system for traffic violations? 3 weeks time for Tamilnadu.. High Court action order!

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

போக்குவரத்தில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது. அதில், இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்திருக்கக் கூடாது என்றும் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் மது அருந்தி இருக்கக் கூடாது என்று புதிய விதிமுறைகளை அமல்படுத்தினர். அதேபோல தலைகவசம் அணியவில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதேபோல எந்த ஒரு ஆவணங்களும் முறையாக வைத்திருக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் என்று தெரிவித்திருந்தனர். இந்த புதிய விதி முறைகளை பலரும் எதிர்த்தனர். இந்த புதிய போக்குவரத்து விதிமுறைகளால் தினக்கூலி மக்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் புதிய போக்குவரத்து விதிமுறைகளை ரத்து செய்யும்படி மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், அபராதம் அதிக அளவு உயர்ந்து உள்ளதால் ஆட்டோ ஓட்டுநர்கள் என தொடங்கி பலரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சில இடங்களில் சாலைகள் தர மற்று  இருக்கிறது இதனால் பலர் கவனக்குறைவுடன் வாகனங்களை இயக்கவும் செய்கின்றனர்.இதனை வைத்து அபராத தொகையை விதித்து காவல்துறையினர் அப்பாவி மக்களிடம் பைன் என்ற பெயரில் அவர்களை துன்புருத்திவருகின்றனர்.

எனவே உயர்த்திய அபராத தொகையை ரத்து செய்யும் படியும் அதேபோல பொதுமக்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தரும் படியும் கேட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழக அரசு இது குறித்து மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Previous articleஅடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!
Next articleதமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!  எந்தெந்த ஊர்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா!