சுங்கச்சாவடி கட்டணத்தில் புதிய மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! 

0
182
New change in toll fees! Happy news for motorists!
New change in toll fees! Happy news for motorists!

சுங்கச்சாவடி கட்டணத்தில் புதிய மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்!

நாடு முழுவது சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனக்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் அறிமுகம் படுத்தப்பட்டது.அதனால் கால விரையம் ,சில்லறை தட்டுப்பாடு ,எரிப்பொருள் வீணாகுதல் போன்றவைகள் தவிர்க்கப்பட இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்படுகின்றது.

ஜிபிஎஸ் மூலம் பணம் செலுத்தும் முறையும் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் கடந்த செப்டம்பர்  ஒன்றாம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்டது.

அதில் சுங்கச்சாவடி வழியாக ஒரு நாளில் பேருந்து ,கார் ,வேன் உள்ளிட்ட 22 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றது.ஒரு நாள் கார் ஒன்றுக்கு 45 ல்லிருந்து ரூ 55 ஆக உயர்ந்துள்ளது.மேலும் குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

தற்போது மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுளார்.அந்த அறிவிப்பில்  நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் குறைக்கப்படும்.மேலும் தமிழகத்தில் உள்ள 9 சுங்கச்சாவடிகளில் 60 சதவீதம் கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Previous articleஅலட்சியம் காட்டிய கடற்படை!!பரிதாபமாக உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி!!
Next articleஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு!