அவர் இருக்கும் வரை கட்சி விளங்கப்போவதில்லை.. கட்சியை விட்டு பிரியா விடை பெரும் உங்கள் தம்பி திருச்சி சூர்யா!
சிறுபான்மை கட்சி தலைவி டெய்சி க்கும் ஓபிசி அணி தலைவர் சூரிய சிவா விற்கும் இடையே ஏற்பட்ட செல்போன் தகராறு வெட்ட வெளிச்சமானது. சூரிய சிவா அந்த செல்போன் தொடர்பில் சிறுபான்மை கட்சி தலைவி டெய்சியை மிகவும் அவதூறாக பேசி இருப்பார்.
இது குறித்த ஆடியோ வெளிவந்தது முதல் பல கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் அண்ணாமலை சூர்யா சிவா மற்றும் டெய்சியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை அடுத்து சூரிய சிவா மற்றும் டெய்சி இருவரும் ஒன்றிணைந்து நாங்கள் அக்கா தங்கை போன்ற உறவு கொண்டவர்கள் என்று பேட்டியளித்தனர்.
இதற்கு முன்பாகவே சூரிய சிவா மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்யும் வரை அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்று அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.இதனை அடுத்து ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சூர்யா மற்றும் டெய்சி பேசிக்கொண்ட ஆடியோவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குறித்து சூரிய சிவா பல குற்றச்சாட்டுகளை வைத்திருப்பார். ஆனால் அதெல்லாம் பற்றி அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை என பல ஊடகங்களும் கேள்வி எழுப்பியது.
அதில் குறிப்பாக ஆர் எஸ் எஸ் முழுநேர ஊழியராக இருந்து பாஜகவில் இணைந்த மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேச விநாயகம் பற்றி பல புகார்களை அடுக்கி இருப்பார். இது குறித்து ஏன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டெய்சி இதற்கு ஒரு பேட்டியில் விளக்கம் அளிக்கும் வகையில் பத்தில் கூறியிருப்பார்.
அதில், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் முன்பு ஒரு பெண் நிர்வாணமாக இருந்தால் கூட அவர் பார்க்க மாட்டார் என்று கூறியிருப்பார். இவ்வாறு இவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அதிருத்தியான நிலையில் இருந்து வந்த ஓபிசி அணி தலைவர் திருச்சி சிவா தற்பொழுது தனது சமூக வலைத்தளத்தில் கட்சியை விட்டு விலகுவது குறித்து பதிவு ஒன்றே போட்டுள்ளார்.
அதில்,அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி @annamalaiஎன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.