சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன்! தோனிக்கு பதிலாக இவரா??
ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 –இல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதையடுத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்தல் மற்றும் விடுவித்தல் அடிப்படையில் 163 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 85 வீரர்களை விடுவித்தன.
விடுவித்த வீரர்களை நிரப்புவதற்கான மினி ஏலம் கொச்சியில் நேற்று பிற்பகல் 2;30 மணிக்கு நடந்தது. தேர்வு பட்டியலில் இருந்த 405 வீரர்களில் 80 வீரர்களை மொத்தம் ரூ.167 கோடிக்கு அணி நிர்வாகங்கள் வாங்கின. சென்னை அணி பிராவோ மாற்றாக ஒரு ஆல்-ரவுண்டரை தேர்ந்து எடுக்க வேண்டிய சுழலில் இருந்தது. அதற்கு முன்பு அணியில் இருந்த சாம் கர்ரனை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் பஞ்சாப் அணி அவரை ரூ.18.50 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது.
அடுத்து பென் ஸ்டோக்ஸ் மேல் ஆர்வம் காட்டி அவரை எடுத்தது. இந்நிலையில் சென்னை கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ள நிலையில், டோனி ஒய்வு முடிவை அறிவித்தால், சென்னை அணி ஒரு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
அதற்கு கடத்த சீசனில் ஆல்-ரவுண்டர் ஜடேஜாவை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அது நிகழவில்லை. எனவே இந்த ஆண்டு புதிய கேப்டனை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பென் ஸ்டோக்ஸ்ஐ இந்த ஆண்டே சென்னை அணி நிர்வாகம் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் தோனி கேப்டன் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க நினைப்பதை பார்க்கிறோம். அவர் ஐபிஎல் தவிர வேறு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. எனவே அவர் கேப்டன் பதவியை மாற்றி விட இது சரியான அற்புதமான தருணமாக இருக்கும். பென் ஸ்டோக்ஸ்ஐ தான் நியமிப்பார்கள் என நினைக்கிறேன். அதையும் உடனடியாக செய்வார்கள் என்று நினைக்கிறேன் எனவும் அவர் கூறி இருக்கிறார்.