ஆண்களே எச்சரிக்கை! சுடுநீரில் குளித்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்!!

0
193

ஆண்களே எச்சரிக்கை! சுடுநீரில் குளித்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்!!

பொதுவாகவே ஆண்களுக்கு அதிக வெப்ப நிலையில் உள்ள இடத்தில் வேலை செய்தாலோ அல்லது அதிக வெப்பநிலையில் இருக்க நேர்ந்தாலோ,அல்லது இருக்கும் மன உடை அணிந்தாலோ விந்து அணுக்களின் எண்ணிக்கையும் வலிமையும் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.ஆனால் அதிகமாக வெந்நீரில் குளித்தால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும் வலிமையும் குறைய வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது திருமணமானவர்கள் கருத்தரித்தலுக்கு முயற்சிக்கும் பொழுது விந்து அணுக்களின் வெப்பநிலையானது உடலின் வெப்பநிலையை விட இரண்டு டிகிரி செல்சியிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்க வேண்டும்.ஆண்கள் வெப்பமான சூழ்நிலையில் நாம் எவ்வளவு நேரம் இருக்கிறோம் என்பதனை பொறுத்து,
வெந்நீரில் குளிப்பதனால் ஏற்படும் அபாயமும் மாறுபடும்.அதாவது ஆண்கள் அதிக வெப்பநிலையில் வேலை செய்துவிட்டு தினமும் சூடான நீரில் குளித்தால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி மற்றும் அடர்த்தி மேலும் அதன் எண்ணிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதிக அளவு சூடு விதைப்பையில் நேரடியாகப்படும் பொழுது அது விந்து அணுக்களின் உற்பத்தியையும் அதன் வலிமையையும் குறைக்க நேரிடும்.

டெஸ்டிகுலர் வெப்பநிலையில் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும் கருத்தரித்தல் 14% குறைகிறது. எனவே அதிக வெப்ப சூழ்நிலையில் வேலை செய்யும் ஆண்கள் தினசரி குளிக்கும் வெந்நீரின் சூட்டை குறைக்கவும் மற்றும் வெந்நீரில் குளிப்பதை தடுப்பதும் நன்மை பயக்கும்.

Previous articleஒரு துண்டு வெல்லம் போதும்! உடலின் இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு!!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here