இன்று இங்கு மதுபான கடைகள் இயங்காது! மீறினால் கடும் நடவடிக்கை!

0
232
Liquor shops will not operate here today! Strict action if violated!
Liquor shops will not operate here today! Strict action if violated!

இன்று இங்கு மதுபான கடைகள் இயங்காது! மீறினால் கடும் நடவடிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஈவெரா. இவர் கடந்த ஜனவரி மாதம் நாலாம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்குப் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அந்த அறிவிப்பின்படி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேலும் அங்கு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தலில் 100 சதவீத  வாக்குப்பதிவு உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்ததால் அதனை கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நாளில் திறக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதனால் மீண்டும் இன்று ஒரு நாள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஅக்னி வீரர்களுக்கான தேர்வு! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
Next articleதங்கம் விலை தொடர் அதிகரிப்பு! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!