தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்!
கொரோனா பரவலுக்கு பிறகு பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. அந்த வகையில் ஒரு சில பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயில் போன்றவை இயக்கப்படுகின்றது. பண்டிகை நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நாள்தோறும் இரவு 11 மணிக்கு அந்தியோதயா விரைவு ரயில் வண்டி எண் 20691 என்ற பெயரில் இயக்கப்படுகின்றது. தற்போது நாங்குநேரி மேலம்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெற்று வருகிறது. அதனால் இந்த ரயில் இன்று முதல் வரும் மார்ச் 21ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் வழக்கம் போல் இயக்கப்படும். அதற்கு பதிலாக வரும் 18ம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை திருநெல்வேலி நாகர்கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்படும். மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் வண்டி எண் 20692 மார்ச் 17ஆம் தேதி மற்றும் மார்ச் 18ஆம் தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும்.
அதற்கு பதிலாக மார்ச் 19ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை நாகர்கோவில் திருநெல்வேலி வரை பகுதி ரத்து செய்யப்படும். இந்த தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 05.05 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் தாம்பரம் வந்தடையும். திருச்சி திருவனந்தபுரம் இடையே தினமும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை திருநெல்வேலி திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்பட்டு அதற்கு பதிலாக மார்ச் 19 முதல் மார்ச் 24ஆம் தேதி வரை திருநெல்வேலி திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.