என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றியமைக்காக மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவங்குட்டி போர்க்கொடி!!

0
212
#image_title

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றி அமைத்ததால் மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி போர்க்கொடி. துணை பாடநூல் தயாரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என எச்சரிக்கை.

கேரளா கல்வி துறை அமைச்சர் வி சிவன்குட்டி விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசன் கீழ் செயல்படும் என்சிஇஆர்டியை மறுசீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளையும் சேர்த்து மறுசீரமைக்க வேண்டும் எனவும் பாடங்களைத் தவிர்த்து பாஜக நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த முடியாது என்றும் எதையும் திணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மாநில அரசின் ஆட்சேபனையை கருத்தில் கொள்ளாவிட்டால், துணை பாடநூல் தயாரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார். “என்சிஇஆர்டி பாடங்களை மாற்றியமைக்கும் செயலை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 6ம் வகுப்பு முதல் பாடப்புத்தகங்களில் இருந்து பிரிவுகள் வெட்டப்படுவதாகவும் இது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் முயற்சி என்றும் இதை எந்த வகையிலும் கேரளா ஏற்காது எனவும் கூறியுள்ளார்.

என்சிஇஆர்டியை மறுசீரமைக்க வேண்டும் என்பதே அரசின் கோரிக்கை எனவும் மகாத்மா காந்தி குறித்த பாடத்தை விலக்குவதாக கூறினால் அதை ஏற்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றும் மாற்று பாடப்புத்தகங்கள் தயாரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஉலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!!
Next articleகடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!