ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி

0
266
#image_title
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி.
முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்  ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது, பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய அரசின் அனுமதியும் கிடைத்திருக்கிறது.
முதல்வரின் உறவினர்கள் பலரும் இந்த அமைப்புகளில் வந்துவிட்டார்கள். ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர் ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு, திருச்சி உள்ளிட்ட ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனை சம்பவம் திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Previous articleகுஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு
Next article12 மணி நேர வேலை சட்டம்! எச்சரிக்கும் இபிஎஸ்!