500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!!

CineDesk

500 Tasmac stores to close!! Tamil Nadu Government Notification!!

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் அதிக வருமானம் வருகிறது. இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பானது எப்போது இருந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, கோவில் மற்றும் பள்ளிகளுக்கு மிக அருகில் இருக்கும் சில்லறை மதுபான கடைகள், மற்றும் 500 மீட்டருக்குள் இரண்டு கடைகள் இருந்தால் அதில் ஒன்று மூடப்படும் என்று தெரிகிறது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும், கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் மதுபானம் அருந்த வரும் மது பிரியர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கி, முதலில் இந்த மதுபான கடைகள் மூடப்படுவதாகவும், பிறகு படிப்படியாக மதுபான கடைகள் மூடப்படும் என  கூறப்படுகிறது.

 இந்நிலையில் கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் மதுபான கடைகள் எப்போது மூடப்படும் என்ற கேள்விக்கு,  ஜூன் 3ம் தேதி, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் அன்று இந்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிகிறது. இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.