மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

Photo of author

By Rupa

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!!

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர்.

ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் வெயிலின் தாக்கம் குறைவாக தெரியவில்லை என்பதால் ஜூன் 12 மற்றும் 15ஆம் தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தனர். அதனடிப்படையில் தற்போது ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டதால் விரைவாக பாடங்களை முடிப்பதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இயங்கு உள்ளது. ஆனால் சில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்பு மட்டும் செயல்படும் என்று கூறியுள்ளனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரும் பட்சத்தில் அவர்கள் சிரமமாக நினைக்கக்கூடும் என்பதால் இவ்வாறான முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளது.