செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??
சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இந்த முகாமில் பல பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் முழுரத்த பரிசோதனை ,ரத்தஅழுத்த பரிசோதனை ,மார்பகப் புற்றுநோய் கண்டரிதல், சிறுநீர் பரிசோதனை, இசிஜி ,தொழுநோய் கண்டரிதல் போன்ற பல பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்திற்கு 64 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தவர் கலைஞர். இதனால் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது என்றார்.
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1050 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இருந்தாலும் ஆனால் அதைவிட கூடுதலாகவே நடத்தி இருக்கிறோம் என்றார்.
பின்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்தது என்றும் பின்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இப்பொழுது அவரின் உடல் நிலையில் நல்ல முனேற்றம் உள்ளது என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை முறையில் உண்மை இல்லை என்று எதிர்க்கட்சி கூறியதற்கு அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்காக அவரின் இதய அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் ஆயிரம் பேர் முன்னிலையில் வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.