மீண்டும் இணையும் ‘திரௌபதி’ டீம், ரிச்சர்ட்டின் புதிய தோற்றத்தை வெளியிடப்பட்ட இயக்குநர் : உச்சகட்ட பரபரப்பில் திரையுலகம்!

Photo of author

By Parthipan K



திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து வசூலில் சாதனை புரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுமாறு தமிழக அரசு அறிவித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதற்கான கெடு வரும் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அடுத்த மாதம் தொடர்ந்து திரையிடப்படும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் ரிச்சர்ட்டுடன் இணைந்து புதிய பட வேலைகளை துவங்கியுள்ளார் இயக்குனர் மோகன், முதற்கட்டமாக கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியின் புதிய தோற்றம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதிய படத்தின் தலைப்பை விரைவில் ஒரு நல்ல நாளில் அறிவிப்பதாக அதில் கூறியுள்ளார். திரௌபதி திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்த அறிவிப்பு திரையுலகில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.