வண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!
நாம் முதன் முதலாக ஒரு வண்டியை வாங்குகிறோம் என்றால் அதற்கு என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.
ஒரு செகனண்ட் பைக்கை வாங்கும் போது அந்த பைக்கை இதற்கு முன்பு எத்தனை பேர் வைத்திருந்தார்கள், அது திருட்டு வண்டியா, இந்த வண்டியின் மீது ஏதாவது காவல்துறை வழக்கு இருக்கிறதா, வண்டியின் மீது வங்கி லோன் ஏதேனும் இருக்கிறதா என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அனைத்து விவரங்களையும் வண்டியின் RC யை வைத்தே சுலபமாக கண்டுபிடித்து விடலாம். இதற்கு முதலில் RC யில் நமது பெயரை மாற்ற வேண்டும். அதற்கு நம்முடைய ஆதார் கார்டு வண்டியின் ப்ரூப் மற்றும் form 29 & 30 என்பதை எல்லாம் கையெழுத்திட்டு அதை ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
பிறகு அவர்கள் இல் உங்களது பெயரை மாற்றி கொடுத்து விடுவார்கள். இருசக்கர வாகனத்திற்கு RC இல் பெயர் மாற்றம் செய்ய 150 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 300 ரூபாயும் ஆகும்.
நாம் வேறு ஒருவருக்கு நமது வண்டியை விற்கிறோம் என்றால் உடனடியாக RC யில் அந்த நபரின் பெயரை மாற்றி கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் அந்த நபர் எந்த தவறு செய்தாலும் RC யில் நமது பெயர் இருப்பதனால் நமக்கே பிரச்சனை ஏற்படும்.
இந்த ஆசியை வைத்து வண்டியின் அனைத்து விவரங்களையும் கண்டறிய முடியும். அதாவது வண்டியின் எண் அதனுடைய நிறம் அதை எத்தனை பேர் வைத்திருந்தார்கள் என்று அனைத்தையும் கண்டறிய முடியும்.
அதில் இருக்கக்கூடிய சீரியல் எண்களின்படி அந்த வண்டியை இதற்கு முன்பு எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விடலாம். அதாவது அதில் நான்கு எண்கள் இருந்தால் இதற்கு முன்பு இந்த வண்டியை நான்கு பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அர்த்தம் அது போல் எத்தனை எண்கள் இருக்கிறதோ அத்தனை நபர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்று அர்த்தம்.
எனவே இதையெல்லாம் முழுவதுமாக சரிபார்த்த பின்னரே செகண்ட் ஆக வண்டியை வாங்க வேண்டும். இல்லையென்றால் நம்மை ஏமாற்றிவிட்டு நம்மிடம் விற்று விடுவார்கள். எனவே ஒரு வண்டியை செகனண்ட் ஆக வாங்கும்போது வண்டியின் புத்தகங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா வண்டிக்கு இன்சூரன்ஸ் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
வண்டிக்கு இன்சூரன்ஸ் போடவில்லை எனில் RC யில் நமது பெயரை மாற்றம் செய்த பிறகே இன்சூரன்ஸ் போட முடியும். இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான ஒன்று, வண்டியானது ஹைபோதிகேசன் ( hypothecation) டிராபிக் வயலேஷன் ( traffic violation) இல்லாத ஒன்றா என்பதை சரி பார்க்க வேண்டும்.
ஹைபோதிகேஷன் என்பது ஒரு சிலர் வங்கியில் லோன் வாங்கியோ, அல்லது பினான்ஸ் வாங்கியோ வண்டியை வாங்கி இருப்பார்கள். பிறகு மாதந்தோறும் இஎம்ஐ கட்டி முடித்து விட்டால் வங்கியில் இருந்து என் ஒ சி அனுப்புவார்கள்.
எனவே இந்த என் ஒ சி ஒரிஜினல் மற்றும் வண்டியின் ஆர்சி புக் ஒரிஜினல் இவை அனைத்தையும் ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பித்தால், வண்டியின் மீது எந்த ஒரு பண பாக்கியம் கிடையாது என்று ஹைபோதிகேஷன்- யை கிளியர் செய்து கொடுத்து விடுவார்கள்.
சில பேர் வங்கியில் லோன் கட்டாமலே போலியான rc புக் தயார் செய்து வண்டியை செகண்டில் விற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் ஹைபோட்டிபிகேஷன் வண்டிக்கு இருக்கிறதா என்பதை சரி பார்த்து வண்டியை வாங்க வேண்டும்.
இந்த ஹைபோதிகேசனை எவ்வாறு பார்ப்பது என்று தெரிந்து கொள்வோம். ஆர் சி யின் பின்புறம் financiar name என்று போடப்பட்டிருக்கும். இந்த வண்டியை பைனான்ஸ் வாங்கியோ அல்லது லோன் வாங்கியோ வாங்கி இருக்கிறார்கள் என்றால், எங்கு வாங்கி இருக்கிறார்கள் என்பது இந்த financiar name இன் கீழ் போடப்பட்டிருக்கும்.
ஒருவேளை லோன் எதுவும் வாங்காமல் பினான்ஸ் எதுவும் வாங்காமல் வண்டியை வாங்கி இருக்கிறார்கள் என்றால் இந்த financiar name இன் கீழ் எதுவுமே போடப்பட்டிருக்காது. பிறகு லோன் வாங்கியது பைனான்ஸ் வாங்கியதை கட்டி முடித்துவிட்டு ஹைபோத்திகேஷனை கிளியர் செய்து விட்டால் இந்த financiar name இன் கீழ் ஹைபோட்டிபிகேஷன் கிளியர் என்று போட்டுக் கொடுத்து விடுவார்கள்.
இதனை அடுத்து வண்டியின் டிராபிக் வைலேஷன் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த வண்டியில் இதற்கு முன்பு ஏதாவது காவல் துறை புகார் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த டிராபிக் வயலேஷன்.
அதற்கு E challan என்ற இணையதளத்திற்குள் சென்று அதில் வண்டியின் எண், இன்ஜின் எண், சேசிஸ் எண் என்ற மூன்றையும் கொடுத்தாலே தெரிந்துவிடும். இல்லையென்றால் RC யில் இருக்கக்கூடிய சிப்பை ஸ்கேன் செய்தாலே தெரிந்து விடும்.