ராணுவ பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர் பணி! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 10 கடைசி நாள்!

0
105
#image_title

ராணுவ பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர் பணி! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 10 கடைசி நாள்!

நாடு முழுவதும் ராணுவ கண்டோன்மெண்ட் மற்றும் ராணுவ நிலையங்களில் செயல்பட்டு வரும் ராணுவ பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை மற்றும் நீலகிரி மாவட்டம் வெல்லிங்க்டன் ஆகிய இடங்களில் ராணுவ பொது பள்ளிகள் உள்ளன.

மத்திய அரசு வேலை

பதவி:

1.முதுகலை ஆசிரியர் (PGT)

2.பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்(TGT)

3.முதன்மை ஆசிரியர் (PRT)

காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 458 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

முதுகலை ஆசிரியர் (PGT): இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் மற்றும் பிஎட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இரண்டு பிரிவுகளிலுமே 50% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்(TGT): இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழத்தில் பட்ட படிப்புடன் பிஎட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இரண்டு பிரிவுகளிலுமே 50% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

முதன்மை ஆசிரியர் (PRT): இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழத்தில் பட்ட படிப்புடன் D.El.Ed./B.El.Ed ஆகிய ஏதேனும் ஒன்றை முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருந்தால் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.ஆன்லைன் வழி எழுத்து தேர்வு

2.நேர்காணல்

எழுத்து தேர்வு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://ost.awes.cbtexamportal.in/#/login என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.இப்பணிகள் குறித்து கூடுதல் விவரம் பெற https://www.awesindia.com/  என்ற இணையதளத்தை அணுகவும்.

கடைசி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-09-2023 கடைசி நாள் ஆகும்.

Previous articleமாதம் ரூ.215900/- ஊதியம்.. TRAI ஆணையத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்று இறுதி நாள்!
Next articleஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!