கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..!

0
354
#image_title

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகம் இருந்தாலோ, பிறரது கண் திருஷ்டி பட்டாலோ மன குழப்பம், நோய் வாய்ப்படுதல், பண செலவு என்று நம் வாழ்க்கையை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து விஷயங்களும் நடக்கும்.

நம் முன்னேற்றத்தை கண்டு தாங்கிக் கொள்ள முடியாத நபர்களால் ஏற்படும் கண் திருஷ்டியை அடியோடு ஒழிக்க கல் உப்புடன் இரண்டு பொருட்களை சேர்த்து ஒரு பரிகாரம் செய்யலாம்.

கல் உப்பு
எலுமிச்சம் பழம்
வர மிளகாய்

இந்த மூன்று பொருட்களுமே கண் திருஷ்டியை ஒழிக்க கூடிய ஆற்றல் கொண்டவை. ஒரு கண்ணாடி கிண்ணம் முழுவதும் கல் உப்பு நிரப்பி வைக்கவும். கல் உப்பிற்கு நடுவில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து நான்கு பக்கமும் 4 வர மிளகாயை சொருகி வைக்கவும்.

இந்த கிண்ணத்தை வீட்டின் தலைவாசல் பகுதியில் அனைவரது கண்படும் இடத்தில் வைக்கவும்.
இதை வாரம் ஒருமுறை செவ்வாய் அல்லது வெள்ளியில் மாற்றி.. புதிதாக அதேபோல் செய்து வைக்கவும்.

இதை மாற்றும் பொழுது பழையதை யாரும் காலும் படாத இடமாக பார்த்துக் கொட்டி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர வீட்டில் உள்ள கண் திருஷ்டி, எதிர்மறை சக்தி நீங்கிவிடும்

Previous articleஎப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது!
Next article9 வகையான பெர்ரி பழங்கள் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?