தோனி பெயரில் நடக்கும் நூதன மோசடி.. ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்..!!
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் என்றாலே சிஸ்கே தான் எனும் அளவிற்கு சிஎஸ்கே அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தோனிக்காகவே அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகம். அந்த அளவிற்கு தோனி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
தோனியை பிடிக்காத நபர்களே இருக்காது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையாக முடிவெடுப்பார். அதனாலயே ரசிகர்கள் இவரை கூல் கேப்டன் என்று அழைப்பார்கள். தோனிக்காக அவரின் ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை அறிந்த மர்ம நபர் ஒருவர் தோனி பெயரில் நூதன மோசடி ஒன்றை செய்து வருகிறார்.
அதன்படி, தோனியின் போட்டோவை ப்ரோபைலாக வைத்துள்ள வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் கணக்கில் இருந்து மர்ம நபர் ஒருவர் மெசேஜ் அனுப்புகிறார். அதில், “நான் தான் தோனி. நான் ராஞ்சியில் புறநகரில் இருக்கிறேன். என் பர்ஸை மறந்து விட்டேன். எனக்கு ரூ.600 போன்பே-ல் அனுப்ப முடியுமா? நான் வீட்டுக்கு சென்று பின் அதை திருப்பி அனுப்புகிறேன்” எனக் தோனி பேசுவது போல மெசேஜ் செய்கிறார்.
அதை பார்த்த உடன் யாரோ ஏமாற்றுகிறார்கள் என்று ஈஸியாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், இந்த மெசேஜ் வந்த அடுத்த சில வினாடிகளிலேயே நான் தோனி என்று நீங்கள் நம்பவில்லை என்றால் எனது செல்ஃபி என்று கூறி தோனியின் செல்ஃபி புகைப்படம் ஒன்றை அனுப்புகிறார். இந்த மெசேஜ் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கே அனுப்பப்படுகிறது.
இதில் சிலர் உண்மையிலேயே தோனி தான் நமக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார் என்று நம்பி பணத்தை இழந்துள்ளனர். எனவே இதுபோன்ற மெசேஜ் உங்களுக்கு வந்தால் பணத்தை அனுப்ப வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.