விரைவில் மெட்ரோ ரயில் சேவை – புதிய விதிமுறைகள் அறிவிப்பு

0
116

கொரோனா பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தளர்வுகளை அறிவித்து வரும் அரசு, பொது பயணிகள் ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்தை இயக்க துவங்கியுள்ளது மத்திய அரசு.

அடுத்து பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையை துவங்க மாநில அரசுகள் பரிசீலித்து வருகிறது. இதில் முதல்கட்டமாக டெல்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை அம்மாநில அரசு துவங்கவுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா நொய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
  • ரயில் நிலைய படிக்கட்டுகளை தொடக் கூடாது, லிப்ட் உள்ளே இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • ரயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் அவசியம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டு அனைவருக்கும் கிருமி நாசினி அளிக்கப்படும்.
  • டிக்கெட் வழங்குவதில் இனி டோக்கனுக்கு பதிலாக முழுமையாக ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்பட உள்ளது.
  • முதற்கட்டமாக 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும், அவசரமான நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 10 மணி மற்றும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள் என்பதால் அந்த நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் 35 ரயில்கள் இயக்கப்படும்.
  • ரயில்களின் உள்ளே 6 நபர் அமரக்கூடிய இருக்கையில் இனி 2 நபர்கள் மட்டுமே அமர்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஒரு ரயிலில் 1270 பயணிகள் பயணிக்கலாம் என்றால், இனி 160 பயணிகளை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
  • இதனை ஈடு செய்யும் வகையில் குறைந்த நேர இடைவெளியில் அதிக ரயில்கள் இயக்கப்படும்.
  • விமான நிலையத்திற்கு சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்தும், வண்ணாரப்பேட்டையில் இருந்தும் ரயில்கள் நேரடியாக இயக்கப்படும்.
  • மெட்ரோ ரயில்வேயால் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த “Last Mile Connectivity” என்ற கார் சேவை இனி இருக்காது.
Previous articleஊரடங்கு – ரிஸ்க் எடுக்கும் தெலுங்கானா! மக்கள் அதிருப்தி
Next articleசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ராமதாஸ் கூறிய காரணம்! ஒப்பு கொண்ட மருத்துவ குழு