தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது.
மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
மேலும், ஜூன் மாதம் முதல் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டவைகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுமா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் மேமதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரம் வரை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றுm தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதம் தோறும் தமிழக முழுவதும் 2.23 கோடி குடும்ப அட்டதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத் தேர்தல் நடத்தி விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துரோகம் பருப்புக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மீதான முடிவுகள் மற்றும் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த கால தாமதம் இருப்பினும், தமிழக அரசின் சீரிய முயற்சியின் காரணமாக இந்த பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு, மே 27ஆம் தேதி வரை 82 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு தல ஒரு கிலோ துவரம் பருப்பும், 75 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மே மாதத்திற்கான மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க பாமாயில் மற்றும் துவரம் பருப்பு தயார் நிலையில் உள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மே மாதத்திற்கான ஒதுக்கீட்டினை இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த மாதத்திற்குள் பாமாயில் மற்றும் துவரம் பருப்பை பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள் குடும்ப அட்டைதாரர்கள், வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரம் வரை, மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினை கருத்தில் கொண்டு, மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்க இயலாத அட்டைதாரர்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது