3வது முறை பிரதமர்.. தமிழ்நாட்டில் மோடி செய்யும் தியானம்!! இடம் நாள் நேரம் குறிச்சிட்டாரு!
கடந்த ஏப்ரல் 19 அன்று தொடங்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசம்,பீகார்,ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 01 தேதி நடைபெற இருக்கிறது.
இறுதிக்கட்ட வாக்கு பதிவு முடிந்து வருகின்ற ஜூன் 04 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வருகின்ற மே 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 30 அன்று பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூரில் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி விட்டு அன்றைய தினமே தமிழகம் வருகிறார்.
தென் மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று ஜூன் 01 அம தேதி வரை தியானம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.முதலில் கன்னியாகுமரி வரும் மோடி அரசு விருந்தினர் இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார்.அதன் பின்னர் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு செல்ல இருக்கிறார்.
அன்றைய தினத்தின் முற்பகல் 5:40 மணியளவில் தியானம் மேற்கொள்ளும் அவர் மறுநாள் ஜூன் 01 ஆம் தேதி பிற்பகலில் தியானத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட இருக்கிறார்.கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமனற தேர்தல் பிரச்சாரம் முடிந்த மறுநாள் வடக்கில் இருக்கின்ற கேதர்நாத் ருத்ரா குகையில் சுமார் 17 மணி நேரம் தியானம் மோடி செய்தார்.இந்நிலையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2024 ஆம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்த பின்னர் தெற்கில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார்.