ஊரடங்கு காலத்தில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய செயலிகள் ! – பட்டியல் உள்ளே

0
159

கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். தங்கள் நேரத்தை கடத்த தங்கள் ஸ்மார் ஃபோனை பொழுது போக்கு அம்சமாக மாற்றி கொண்ட மக்கள் பல சமூக வலைத்தள செயலிகளை தரவிறக்கம் செய்துள்ளனர்.

இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் டிக்டாக் முதலிடத்தில் உள்ளது. இந்த செயலியை சுமார் 1 கோடியே 6.12 லட்சம் இந்தியர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சுமார் 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.

இதில் ஆச்சரியப்படுத்தும் விதமாக மூன்றாவது இடத்தில் ஹெலோ செயலி இடம் பிடித்துள்ளது. இதனை சுமார் 66 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஹெலோ செயலி, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களை பிடித்துள்ள செயலிகள் விவரம்

  • Tik Tok – 10,612,798 Downloads
  • Instagram – 7,139,647 Downloads
  • Helo – 6,639,011 Downloads
  • Facebook – 4,713,383 Downloads
  • Helo Lite – 2,812,633 Downloads
  • Facebok Lite – 2,805,302 Downloads
  • HAGO – 2,48,212 Downloads
  • Snapchat – 2,038,752
  • Lamour – 1,759,094 Downloads
  • VMate Status – 1,524,817 Downloads
Previous articleYouTubeல் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் மொழி எது தெரியுமா?
Next articleமத்திய அரசின் போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு – விவரம் உள்ளே