கண்களின் அழகை பாழாக்கும் டார்க் சரக்குல்ஸ் நீங்க.. இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

நமது முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க. ஆனால் இன்று பலருக்கும் கண்களுக்கு கீழ் கருமையான வட்டம் அதாவது கருவளையம் உருவாகி அழகை கெடுக்கும் வகையில் உள்ளது.

மன அழுத்தம்,தூக்கமின்மை,மின் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது,ஊட்டச்சத்து குறைபாடு,நீண்ட நேரம் டிவி பார்ப்பது போன்ற காரணங்களால் கண்களுக்கு கீழ் கருவளையம் உருவாகிவிடுகிறது.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கருவளையப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.கருவளையத்தால் கண் அழகு குறைவதோடு முகம் பொலிவற்று போய்விடும்.இன்று பெரும்பாலான பெண்கள் கண்களுக்கு கீழ் இருக்கின்ற கருவளையத்தை மறைக்க மேக்கப் போடுகின்றனர்.இதனால் சிலமணி நேரம் மட்டுமே கருவளையம் வெளிப்படாமல் இருக்கும்.மேக்கப் கலைந்ததும் கருவளையம் தெரிய ஆரம்பித்துவிடும்.

சிலர் கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்தி கருவளையத்தை மறைகின்றனர்.இதனால் கண் ஆரோக்கியம் வெகுவாக பாதிப்பை சந்திக்கிறது.

கருவளையம் உருவாக காரணங்கள்:

*கண் சோர்வு
*வயது முதுமை
*கண் அலர்ஜி
*மரபணு மாற்றம்
*கண் ஈரப்பதமின்மை
*மனச் சோர்வு

கருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்:

தேவையான பொருட்கள்:

1)கற்றாழை ஜெல்
2)தேன்
3)உருளைக்கிழங்கு சாறு

பயன்படுத்தும் முறை:

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாறு,ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல் மற்றும் 1/2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும்.

இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு உலர விடவும்.பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி கண்களை சுத்தம் செய்யவும்.சில தினங்களில் கண்களுக்கு கீழ் இருந்த கருவளையம் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

1)பால்
2)பேக்கிங் சோடா

ஒரு கிண்ணத்தில் நான்கு தேக்கரண்டி காய்ச்சாத பால் மற்றும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து க்ரீம் பதத்திற்கு மிக்ஸ் செய்து கண்களை சுற்றி அப்ளை செய்யவும்.பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கண்களை சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் சில தினங்களில் கண்களுக்கு கீழ் இருந்த கருவளையம் மறைந்துவிடும்.