நமது உடலில் இன்சுலின் குறைவாக சுரந்தாலோ,அல்லது சீரற்று சுரப்பது அல்லது சுரக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் நீரழிவு நோய் ஏற்படுகிறது.நீரழிவு நோய் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது.பரம்பரைத் தன்மை,உடல் பருமன்,மன அழுத்தம்,உயர் இரத்த அழுத்தம்,சோம்பல் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இது மட்டும் தான் நீரிழிவு நோய் வரக் காரணமா என்றால் உணவுகளை நாம் சமைத்து உண்ணும் முறையை பொறுத்தும் இந்நோய் வரக் கூடும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
உயிர் வாழ உணவு அடிப்படை விஷயமாக இருக்கிறது.அப்படி இருக்கையில் அவை ஆரோக்கியமானதா என்று நாம் ஆராய வேண்டும்.இப்பொழுது ஆரோக்கியம் இல்லாத உணவுகளையே மக்கள் தேடி தேடி உண்கின்றனர்.கொழுப்பு நிறைந்த உணவுகள்,எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகளால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.
உணவுகளை அதிக நேரம் வறுத்தலோ,பொரித்தாலோ அதில் கிளைகேஷன் என்கின்ற கெமிக்கல் உருவாகிவிடும்.இந்த உணவுகளை சாப்பிட்டால் நிச்சயம் நீரிழிவு நோய் உருவாகிவிடும்.
பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்,ப்ரைடு சிக்கன்,கேக்,பிஸ்கட்,இனிப்பு பண்டங்களில் கிளைகேஷன் என்கின்ற கெமிக்கல் என்ற அதிகளவு இருக்கிறது என்று ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.எனவே இது போன்ற தரமற்ற உணவுகளை உட்கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
உணவுகளை எண்ணெயில் வறுப்பது,பொரிப்பது போன்ற முறைகள் மூலம் உட்கொள்ளாமல் ஆவியில் வேக வைத்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.அதேபோல் முழு தானிய உணவுகள்,சில வகை பழங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது