ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் அழகும், நல்ல நடிப்பு திறமையும் இருந்து விட்டால் போதும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நிலையில் தன்னுடைய அதிக அழகால் நிராகரிக்கப்பட்ட நடிகையும் சினிமா துறையில் உள்ளனர்.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட நடிகை தான்பாலிவுட் நடிகை தியா மிஸ்ராதான். இவரது தாய் தந்தையர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ள நிலையில், இவர் யாரினுடைய அடையாளமும் இன்றி தன் வாழ்வில் தனித்து முன்னேற நினைத்துள்ளார்.
இவர் இந்தி சினிமா துறையில் முதன் முதலில், தமிழில் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மின்னலே படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் படம் ஆகும்.
இவருடைய அழகும் நடிப்பும் இவரது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனினும் சினிமா திரையுலகை பொருத்தவரையில் இவருக்கு பல இடங்களில் எதிர்மறையான பதில்களை கிடைத்தன.
மேலும் இவர் கூறுகையில், ” எனக்கு நல்ல குடும்பப்பாங்கான கதைகளில் நடிக்க ஆசை என்றும்” தெரிவித்திருக்கிறார். ஆனால் இவரது அதீத அழகால் இந்த கதாபாத்திரத்திற்கு நீ பொருந்த மாட்டாய் என நிராகரிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கலங்காத நின்ற இவர் 2000 ஆம் ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் இன்டர்நேஷனல் பட்டத்தை தட்டிச் சென்றவர் நடிகை தியா மிஸ்ரா. ‘தாஸ்’, ‘லகே ரஹோ முன்னா பாய்’, ‘ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் ‘சஞ்சு’ போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.