“கொரோனா” 20 நிமிடத்தில் ஓவர்! பேராசிரியர்-மாணவர்களின் கூட்டணி வெற்றி!

0
77

20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடும் கருவியை  ஹைதராபாத் IIT  மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முழு உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மார்ச்23 ஆம் தேதி  முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதை தொடர்ந்து, 5வது கட்ட நிலையில் , ஊரடங்கு அமலில் உள்ளது .

இந்தியாவின் சில பகுதியில் தாக்கம் குறைவாகவும், சில பகுதிகலில் தாக்கம் அதிகமாகவும் இருப்பதால், தற்போது பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கில்  தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட்டும் ,அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கை திவிரப்படுத்துமாறும்,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது அதன் படி , ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது  நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஒரே வழி பரிசோதனைகளை  அதிக படுத்துவது தான்.

தற்போது கொரோனா பாதிப்பை கண்டறிய RDPR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக பரிசோதனை முடிவுகள் வெளியாகுவதற்கு கால தாமதம் ஏற்படும் .இந்திய உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள மிக பெரிய நாடுகளில் இம்மாதிரியன தாமதமான முடிவுகளை வெளியிடும் கருவியை கொண்டு பரிசோதனை மேற்கொள்வது என்பது சவாலான ஒன்றாக கருதபட்டு வந்தது .

எனவே பரிசோதனையை வேகப்படுத்த ஹைதராபாத் IIT கல்வி நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர்களும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆகியோர் செயற்கையாக நுண்ணறிவு திறன் கொண்ட கொரோனா பரிசோதிக்கும் கருவியை வடிவமைத்தனர். இக்கருவி  20 நிமிடங்களுக்குள்  கொரோனா பரிசோதனை வெளியிடும் திறனை கொண்டது.

தற்போதைய நிலைமைக்கு இக்கருவி மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு  ரூபாய் 600 வரை செலவாகும் எனவும் தெரிவித்தார்கள், வருங்கத்தில் பரிசோதனை அதிகரிக்கப்படும் பச்சத்தில்  அதனுடைய விலை 350 ஆக குறைக்கப்படும் என பேராசிரியர்கள் சார்பில் தெரிவிக்க பட்டது மேலும்  இந்த கருவியை உருவாக்குவதற்காக ICMR அமைப்பிடம் அனுமதி பெற்றதாகவும் IIT பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.