நியூயார்க் மாநகரில் நடைபெற்று வரும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட.. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக நாடு முழுக்க நடத்தப்பட்ட Edison Research’ நிறுவனத்தின் தேசிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், எடிசன் ரிசர்ச்சில் 44 சதவீத வாக்காளர்கள் ரொம்ப அதிபராக வரவேண்டும் என்றும், 46 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஷ் அதிபராக வரவேண்டும் என்றும் தங்களுடைய எண்ணங்களை பதிவிட்டு இருக்கின்றனர் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள 31 சதவீத வாக்காளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மீதமுள்ள 69 சதவிகிதத்தில், 11% பேர் குடியேற்றம், 14% கருக்கலைப்பு, 34% ஜனநாயகத்தின் நிலை, 4% வெளியுறவுக் கொள்கை ஆகியவை மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இவை மட்டுமின்றி, கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார அளவில் நாடு பின் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிரம்ப் அவர்களுக்கு தான் பொருளாதாரத்தை நன்றாக கையாளத் தெரியும் என்றும் சிலர் கூறி இருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலை பொருத்தவரையில் அதிக அளவில் எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுமாம்.
மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் :-
பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும். உதாரணமாக ஒரு மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களுக்கே.. மொத்தமாக அந்த மாகாணத்தின் எல்லா எலக்ட்ரல் வாக்குகளும் வழங்கப்படும்.