உங்கள் குழந்தை 5 வயதிற்கு கீழ் உள்ளவரா? அப்போ இந்த FOODS மட்டும் கொடுக்காதீங்க ப்ளீஸ்!!

Photo of author

By Gayathri

குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது அவர்களின் உணவுப் பழக்கங்களை பொறுத்துள்ளது.பொதுவாக குழந்தைகளை சாப்பிட எளிதில் சாப்பிட வைப்பது சவாலான ஒரு செயலாகும்.

ஒழுங்காக சாப்பிட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் சில வகை உணவுகள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்க கூடியவையாக இருக்கிறது.அந்தவகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் எவை என்பது குறித்து பெற்றோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நிறைந்த உணவுகளை குழந்தைகள் விரும்பி உண்கிறார்கள்.இதனால் மிட்டாய்,இனிப்பு நிறைந்த குளிர் பானங்களை பெற்றோர் வாங்கி கொடுக்கிறீர்கள்.இது குழந்தைகளின் பல் மற்றும் குடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதித்துவிடும்.

உலர் விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான்.இருப்பினும் குழந்தைகளால் அதை கடித்து விழுங்க முடியாது.இதனால் கடிக்காமல் விழுங்கி விடுவார்கள்.இது செரிமானப் பிரச்சனை,மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்க கூடாது.இது தசை பலவீனம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பழங்களை அரைத்து தான் கொடுக்க வேண்டும்.திராட்சை போன்ற பழங்கள் சிறியதாக இருப்பதால் பெற்றோர் அதை அப்படியே குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.இதை கடித்து சாப்பிட முடியாத குழந்தைகள் விழுங்கிவிடுவார்கள்.இதனால் மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

குழந்தைகளுக்கு கடினமான பழங்களை கொடுக்க கூடாது.சூயிங் கம் போன்ற ஆபத்தான மிட்டாய்களை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.இதை குழந்தைகள் விழுங்க அதிக வாய்ப்பிருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி,பொரித்த உணவுகள்,கொழுப்பு உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.இது உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.