தலையில் வெள்ளை முடி வந்து விட்டால் அதை மறைக்க பயன்படுத்தப்படும் பொருள் டை.முன்பெல்லாம் வயதான பிறகு தான் வெள்ளை முடி எட்டி பார்த்தது.ஆனால் இக்காலத்தில் பள்ளி பருவ குழந்தைகளுக்கும் வெள்ளை முடி வரத் தொடங்கிவிட்டது.இதனால் சிறு வயதிலேயே கெமிக்கல் டை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.இயற்கை முறையில் இளநரையை போக்க முடியும்.
ஆனால் அதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் உடனடியாக முடியை கருப்பாக்கும் கெமிக்கல் டையை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்கு ஏற்றார் போல் 2 நிமிடங்களில் வெள்ளை முடியை கருமையாக்கும் ஹேர் டை போன்ற விளம்பரங்களும் ஒளிபரப்பப்படுகிறது.
கெமிக்கல் கலந்த ஹேர் டையால் நம் தலை முடி மற்றும் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்தால் நிச்சயம் இனி அதை பயன்படுத்த மாட்டீர்கள்.
கெமிக்கல் ஹேர் டை தரமற்று இருந்தால் முடி ஆரோக்கியம் சீர்குலையும்.முடி வெடிப்பு,முடி உடைதல்,அதிகப்படியான முடி உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நரை முடியின் தாக்கம் அதிகரிக்கும்.
பொடுகு தொல்லை,வழுக்கை பிரச்சனை போன்றவை ஏற்படக் கூடும்.சிலருக்கு கெமிக்கல் டை அலர்ஜியாக மாறிவிடும்.இதனால் சரும அரிப்பு,கண் எரிச்சல்,தலை அரிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தொடர்ந்து கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தி வந்தால் சரும புற்றுநோய்,பார்வை குறைபாடு போன்ற அபாயங்கள் உண்டாகும்.தலைக்கு பயன்படுத்தபடும் கெமிக்கல் ஹேர் டை உடலுக்கு சென்று சுவாசப் பிரச்சனை,வயிற்று வலி,வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.எனவே கெமிக்கல் ஹேர் டை பயன்பாட்டை குறைத்து இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருமையாக்க முயலுங்கள்.