தினமும் ஓடி ஓடி உழைக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தின் மீது துளியும் அக்கறை செல்லுவதில்லை.இதனால் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.குறிப்பாக வயதான பின்னர் சந்திக்கும் மூட்டு வலி,கால் வலி போன்ற பாதிப்புகளை இன்றைய காலத்தில் இளம் வயதினர் பலர் சந்திக்கின்றனர்.
கால் வலி,பாத வெடிப்பு,கால் நரம்பு வலி போன்ற பாதிப்புகளை குணப்படுத்த நெய் பயன்படுத்தலாம்.நெய் ஒரு மாய்ஸ்சரைசிங் போல் பயன்படுகிறது.வறண்டு போன கால்களை மென்மையாக்க நெய்யை கால்களில் தடவலாம்.
குளிர்காலங்களில் பாத வெடிப்பு,பாத எரிச்சல்,கால் புண் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.இதை சரி செய்ய நெய் பயன்படுத்தலாம்.கால் பாதங்களில் நெய் அப்ளை செய்து மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
நெயில் வைட்டமின்கள் அதிகளவு இருக்கிறது.நெய்யை பாதங்களில் தடவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கால்களில் நெய் தடவுவதால் ஒருவித எனர்ஜி கிடைக்கும்.கால் பாத நரம்புகள் அனைத்தும் ரிலாக்ஸ் ஆகும்.
தினமும் வெந்நீரில் கால்களை கழுவிய பிறகு நெய் அப்ளை செய்தால் பாதங்கள் மிருதுவாக இருக்கும்.வெடிப்புகள் அனைத்தும் மமறைந்து பாதங்கள் அழகாக காட்சி தரும்.
சூடான நீரில் நெய் ஊற்றி பருகினால் கால் பாதங்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.நெய் பிடிக்காதவர்கள் இப்படி கால்களில் நெய்யை தடவி வந்தால் கால் சம்மந்தப்பட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.எனவே தினமும் பாதங்களுக்கு நெய் தடவுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.