அரசியல் துறையில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய தலைவர்கள் இன்றளவும் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றனர். அதில் சிலருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை குறித்த சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் காண்போம்.
பெரியார் :-
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், பெரியார். இப்படம் ராமசாமி என்னும் பெரியாரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள பயோபிக் (சுயசரிதை) திரைப்படமாகும்.
காமராஜ் :-
தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்த அரசியல் தலைவர், காமராஜர். இவர் சத்துணவு திட்டம் போன்று பல விஷயங்களை வெற்றிகரமாக செய்து பலரின் அன்பினை பெற்றவர். இவரது வாழ்க்கையை திரைப்படமாக எ பாலகிருஷ்ணன் இயக்க, ரிச்சர்ட் மதுரம் காமராஜாக நடித்துள்ளார். இவருடன், மகேந்திரன், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தலைவி – ஜெ ஜெயலலிதா :-
தலைவி – இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் ஸ்வாமி என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் தமிழக முதல்வர் மற்றும் புகழ் பெற்ற அரசியல் தலைவருமான ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்பட காவியமாக உருவாக்கியுள்ளனர். இப்படம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ரிலீஸ் செய்யப்பட்டு பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
மோடி :-
நரேந்திர மோடி – இந்தியாவின் பிரதம மந்திரி ஆவார். இவரது வாழ்க்கை பயணம் பற்றிய திரைப்படமாக உருவாக்கியுள்ளனர், பிரபலங்கள். இந்த படத்தில் மோடி கதாபாதிப்பத்திரத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் நடித்துள்ளார். இப்படம் 2019ஆம் இந்திய முழுவதும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் – மன்மோகன் சிங் :-
ஹிந்தி சினிமாவில் முன்னாள் காங்கிரஸ் பிரைம் மினிஸ்டர் மன்மோகன் சிங் வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டனர், இப்படத்தின் தலைப்பு தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர். இந்த தலைப்பு சர்ச்சை ஆனது. இப்படத்திற்கு பலர் தங்களின் ஆதரவை அளித்துள்ளனர்.
என் டி ஆர் :-
ஆந்திரா பிரதேஷ் அரசியல் களத்தில் மிக பிரபலமான அரசியல் தலைவர், என் டி ஆர். இவர் ஒரு திரைப்பட கலைஞராக இருந்து மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று பின் அரசியல் தலைவராக அவதரித்து பல நன்மைகளை செய்து வந்தவர். இவரின் வாழ்க்கை வரலாற்று என்ற சுயசரிதை திரைப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணன் (பாலையா) நாயகனாக நடித்துள்ளார்.
யாத்ரா :-
யாத்ரா – தெலுங்கு சினிமாவில் நடிகர் மாமூட்டி, ஜெகபதி பாபு, சுஹாசினி என பலர் நடித்திருக்கும் அரசியல் திரைப்படம். இப்படம் ஆந்திரா பிரதேஷ் அரசியல் தலைவரான ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.
யாத்ரா 2 :-
யாத்ரா திரைப்படம் ராஜசேகர ரெட்டி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வெற்றி பெற்ற படமாகும். இப்படத்தின் இரண்டாம் பாக திரைப்படமாக யாத்ரா 2 படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதைக்களம் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின் அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டி அரசியல் வருகை போன்ற பல விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது. இப்படத்தில் ராஜசேகர் ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி மற்றும் ஜகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளனர்.