தினமும் 1 ஏலக்காயை வாயில் போட்டு மென்றால்.. BP வாய் துர்நாற்றம் வயிறு கோளாறு அனைத்தும் காணாமல் போகும்!!

Photo of author

By Gayathri

இந்திய உணவுகளில் ஏலக்காய் பயன்பாடு அதிகமாக உள்ளது.நறுமணம் நிறைந்த இந்த ஏலக்காய் இனிப்பு உணவுகளின் சுவையை கூட்டுகிறது.தென் இந்தியாவில் ஏலக்காய் முக்கிய பொருளாக இருக்கிறது.

உணவுகளின் வாசனையை அதிகப்படுத்தும் இந்த ஏலக்காயில் வைட்டமின் பி,சி,நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.உடல் எடை இழப்பு முதல் உயர் இரத்த அழுத்தம் வரை பல நோய்களை குணப்படுத்தும் மூலிகையாகவும் இது திகழ்கிறது.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஏலக்காயை இடித்து ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து குடித்தால் கட்டுப்படும்.இஞ்சி,ஏலக்காய் சேர்த்த தேநீர் அருந்தினால் சளி,காய்ச்சல் ஓடிப்போகும்.

வெறும் வயிற்றில் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நீங்கள் நீண்ட காலமாக செரிமானப் பிரச்சனையை சந்தித்து வருகிறீர்கள் என்றால் ஏலக்காயை இடித்து உணவு உட்கொள்வதற்கு முன் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.இதனால் செரிமான ஆற்றல் அதிகரித்து உணவு எளிதில் செரிமானமாகும்.

வயிறு உப்பசம்,வாயுத் தொல்லையால் அவதியடைந்து வருபவர்கள் எலக்காயை இடித்து ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து பருகலாம்.வாந்தி,குமட்டல் ஏற்படுபவர்கள் ஏலக்காயை தேநீர் அருந்தி பலனடையலாம்.

வெளியில் செல்வதற்கு முன் வாயில் ஒரு ஏலக்காய் போட்டு மென்று சாப்பிடுங்கள்.இவ்வாறு செய்வதால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும்.தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்,வயிற்றுப் பொருமல்,அஜீரணக் கோளாறு உள்ளிட்டவை நீங்கும்.