இதை செய்தால்.. வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கவே செய்யாது!!

0
78
If you do this.. Even if you eat on a full stomach, you will not gain weight!!
If you do this.. Even if you eat on a full stomach, you will not gain weight!!

இன்றைய காலத்தில் உணவுமுறையில் கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது முக்கியம்.காலத்திற்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது.தற்பொழுது நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமற்றவையாக உள்ளது.

கொலஸ்ட்ரால்,சர்க்கரை,கார்போ ஹைட்ரேட்,சர்க்கரை,கலோரி போன்றவை அதிகம் உள்ள உணவுகளையே அனைவரும் விரும்பி உண்கிறார்கள்.உணவை உரிய நேரத்தில் உட்கொண்டால் மட்டுமே அவை எளிதில் செரிக்கும்.ஆனால் இன்று நேரம் காலமின்றி நள்ளிரவு நேரத்தில் பிரியாணி,பரோட்டா போன்றவை உண்பது ட்ரெண்டாக பரவி வருகிறது.இதனால் இளம் வயது உடல் பருமன்,மாரடைப்பு,சுகர் போன்ற உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுகளால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து உடல் எடையை அதிகரித்துவிடுகிறது.இதனால் சிலரால் விரும்பிய உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

நாவை கட்டுப்படுத்த முடியாத சிலர் உடல் ஆரோக்கியம் பற்றி கவலை கொள்ளாமல் உணவை ருசிக்கின்றனர்.சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க கூடாது என்ற பேராசை இருக்கும்.இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம் என்று ஆய்வுகள் சொல்கிறது.

உணவு உட்கொள்வதற்கு முன் நாம் சில விஷயங்களை மேற்கொள்வதால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும்.உணவு உட்கொள்வதற்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கப் தண்ணீர் குடித்தால் உடல் எடை இழப்பு அதிகமாகும்.

உடல் சீராக இயங்க தண்ணீர் அவசியமான ஒன்று என்பது அனைவரும் அறிந்த உண்மையே.தினசரி 8 கிளாஸ் தண்ணீர் அருந்தி வந்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால் குறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

Previous articleதலைக்கு பால் நெய் அல்லது நெய் எது சிறந்தது தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleகடலைமாவு பேஸ் பேக் யூஸ் பண்றிங்களா? அப்போ இந்த ஒரு பொருளை மறந்தும் சேர்க்காதீர்!!