1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 வயது கிழவனை போல் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
இவர் என்னதான் புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவருடைய வாக்குநடை, இவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து இவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் எப்போதுமே சினிமாவில் அவருக்கு கிடைக்கும் சம்பளத்தை சினிமாவிற்காகவே தியாகம் செய்வேன் என கூறுவார். அதைப்போல வி கே ராமசாமியும் சினிமாவிலிருந்து கிடைக்கும் பணத்தை சினிமாவிற்காகவே செலவழித்து இருக்கிறார் என்று அவருடைய மகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வி கே ராமசாமி குதிரை ரேஸில் ஆர்வம் கொண்டவராம் .அதிலும் பணத்தை செலவழிப்பார் என அவருடைய மகன் கூறினார் .
வி கே ராமசாமியின் மகன் ரகுநாத்திடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வியும் அதற்கான பதிலும் :-
எஸ் ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது சிவாஜி கணேசனுக்கு வி கே ராமசாமி சீனியர் என்பதால் வி கே ராமசாமியின் உடைகளை துவைத்து கொடுப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து சிவாஜி கணேசன் நிறைய இங்கிலீஷ் படங்கள் பார்ப்பார் என பதிவு செய்திருந்தார்.அது உண்மையா என வி கே ராமசாமியின் மகனிடம் கேட்டார் .
அதற்கு அவருடைய மகன் ரகுநாத் ‘இப்படி ஒரு தகவலை என் அப்பா என்னிடம் சொன்னதே கிடையாது. அந்த சமயத்தில் இப்படி ஒரு செய்தி பத்திரிகைகளில் எழுதி இருக்கலாம். ஆனால் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. அந்த மாதிரி நடந்திருந்தால் என் அப்பா கூறி இருப்பார் .ஆனால் எனக்கு இதைப் பற்றி சரியாக தெரியாது’என பதில் அளித்து இருக்கிறார்.

